மட்டன் மசாலா சமோசா

Webdunia|
FILE
அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன் என்றால் எப்போதும் ஒரே மாதிரியான பிரியாணி, சாப்ஸ் போன்ற உணவு வகைகள் தான் நினைவுக்கு வரும். இப்படி ஒரே மாதிரியான வகைகளை செய்வதற்கு பதிலாக மட்டனை வைத்து சமோசா போன்ற உணவுகளை செய்து சுவைத்து மகிழலாம்.

தேவையானவை :

மைதா - 350 கிராம்
பேக்கிங் பௌடர் - 1/2 தேக்கரண்டி
கொத்துக்கறி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மல்லித்தழை - 1/2 கப்
புதினா இலை - 1/4 கப்
இஞ்சி - 1 அங்குலம்
பச்சை மிளகாய் - 4 உப்புத் தூள் - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 பெரியது
கரம் மசாலா - 1 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவில் பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும்.

கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய வெங்காயம், மல்லித்தழை,புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். மைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், நெய், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். ஒரு பெரிய தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா , மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.
கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும். மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும்.

1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :