வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சமூக அவல‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2016 (18:02 IST)

’முகமூடி கிழிந்து ரொம்ப நாளாச்சு’ - ஜெயமோகனை தாக்கும் ஞானி

ஜெயமோகனின் முகமூடி கிழிந்து போய் ரொம்ப நாளாச்சு என்று எழுத்தாளர் ஞானி சங்கரன் தெரிவித்துள்ளார்.
 

 
வங்கி ஊழியர் ஒருவர் மிக மெதுவாக வேலைப் பார்க்கும் வீடியோ ஒன்றினை செந்தில்ராஜ் என்பவர் அனுப்பி, அது குறித்து ஜெயமோகனிடம் கருத்து கேட்டிருக்கிறார்.
 
அதற்கு ஜெயமோகன், “நியாயப்படி இந்தக் கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.
 
இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.
 
எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பதிவிற்கு எழுத்தாளர் ஞானி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இது குறித்து தனது முகநூலில் கூறியுள்ள ஞானி, “ஒரு வங்கி பெண் ஊழியரின் வீடியோவைப் போட்டு அநாகரிகமாக அது பற்றி ஒரு 'எழுத்தாளன்" எழுதியிருப்பதைப பார்த்தேன். வக்கிரமும் வன்மமும்பொய்யும் புனைசுருட்டும் நிரம்பித்ததும்பும் மனதிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்? எழுத்தாற்றல் என்ற முகமூடி கிழிந்து போய் ரொம்ப நாளாச்சு” என்று குறிப்பிட்டுள்ளார்.