செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By

நவராத்திரியின் போது நவகன்னிகா வழிபாடு...!

நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறையாகும்.
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு  ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
 
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி.
 
இரண்டாவது நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
 
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
 
நான்காம் நாள் - 5 வயதுக் குழந்தை - ரோஹிணி
 
ஐந்தாம் நாள் - 6 வயது குழந்தை - காளிகா
 
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
 
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
 
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா
 
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸூபத்ரா என்று வணங்கப்படுவார்கள்.
 
பிரட்டாசி மாத வலர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.
 
முதல் மூன்று நாட்களில் துர்க்கையின் வழிபாடு, இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என நவராத்தியின் ஒன்பது நாட்களில் நவகன்னிகா வழிபாடு செய்யப்படுகிறது.