Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை மருந்து மிளகு!

Widgets Magazine

சளி தொல்லைக்கு மிளகை நன்றாக பொடித்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.

 
அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை   சாப்பிட்டு வர குணமாகும்.
 
கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி  குணமாகும்.
 
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும்,  பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
 
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலை வலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால்  தலைவலி தீரும்.
 
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து  சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு  உப்பசம்   குணமடையும்.
 
மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது.
 
மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நஞ்சை முறுக்கும் தன்மை கொண்டது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது  பழமொழி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இயற்கை கொடுத்த வரம் முருங்கை கீரை மற்றும் பூ - பயன்கள்!

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலைகளில் ...

news

கோடையில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனையை சமாளிக்க...

கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு நீர்சத்து ஆகாரங்கள் குடிக்காமால் இருப்பதால், இதனால் ...

news

இந்த இயற்கை பானத்தால் பல நோய்களுக்கு கிடைக்கும் தீர்வு!

இந்த இயற்கை பானத்தால் பல நோய்களுக்கு கிடைக்கும் தீர்வு!

news

பிரசவத்திற்கு பின் பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய உணவுமுறைகள்!

பெண்களூக்கு பொதுவாக சுகபிரசவம் அல்லது சிசேரியனில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும். இதை ஈடு ...

Widgets Magazine Widgets Magazine