Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வால்நட்ஸை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Sasikala|
வால்நட்ஸை மருத்துவ குணம் நிறைந்த தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அது உடலில் உள்ள சில பிரச்சனைகளுக்கு  உடனடி நிவாரணம் அளிக்கும். வால்நட்ஸில் அத்தியாவசிய கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், புரோடீன்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

 
 
இங்கு தேனில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சிறிது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.
 
இரத்த சோகை உள்ளவர்கள் 1/2 கிலோ தேனில், 1/2 கிலோ வால்நட்ஸ் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, ஒரு ஸ்பூன் என தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த சோகையில் இருந்து உடனடி நிவாரணம்  கிடைக்கும். 
 
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 100 கிராம் வால்நட்ஸை, 100 கிராம் தேனுடன் சேர்த்து கலந்து, 45 நாட்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 
 
தேனில் ஊற வைத்த வால்நட்ஸை தினமும் சிறிது சாப்பிட்டு வாருங்கள். வயிற்று அல்சர் வயிற்றில் புண் இருந்தால், 20 கிராம் வால்நட்ஸை தட்டி, சுடுநீரில் போட்டு நன்கு காய்ச்சி அரைத்து வடிகட்டி, 2 ஸ்பூன் தேன் கலந்து, உணவு உண்பதற்கு 1/2  மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள புண் குணமாகும். 
 
மலட்டுத்தன்மை நீங்கி, பாலியல் வாழ்க்கை சிறக்க, வால்நட்ஸ் மற்றும் தேனை சரிசம அளவில் ஒன்றாக கலந்து ஊற வைத்து, தினமும் மூன்று வேளை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 2 ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி 20-30  நாட்கள் உட்கொண்டு வர நல்ல பலன் கிடைக்கும். 
 
குருதி ஊட்டக்குறை மற்றும் தூக்கமின்மை 100 கிராம் தேன் மற்றும் வால்நட்ஸை ஒன்றாக ஊற வைத்து, 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட, குருதி ஊட்டக்குறைபாடு நீங்கும். மேலும் தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :