வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சரும பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும் உதவும் மஞ்சள்...!!

மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி  விடும்.
மஞ்சளில் ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் மிகுதியாக உள்ளது.  குர்குமினில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும்  ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருக்கிறது. இவை உடலில் கிருமி நாசினியாக செயல்படுகிறது.
 
மஞ்சள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. அதனால் உணவில் சமைக்கும்போது மஞ்சள் சேர்த்து கொள்ளலாம். கடைகளில்  கிடைக்கும் மஞ்சள் பொடியை வாங்கி பயன்படுத்தாமல், கிழங்கு மஞ்சளை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
 
முகத்தில் சிறுவயதிலேயே சுருக்கம் ஏற்படாமல் தடுக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது. தோல் விரைவில் தளர்ந்துவிடாமலும் தடுக்கிறது.
 
முகப்பருக்களை போக்குவதில் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.  பருக்கள், வெடிப்புகள் மட்டுமல்லாமல், முகத்தில் ஏற்படும் பள்ளங்கள், உடலில் ஆங்காங்கே சிவப்பு திட்டுகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் மஞ்சளுக்கு உள்ளது.
 
சிலருக்கு சோப்புகளை மாற்றி பயன்படுத்தினாலோ அல்லது புதிய உணவை சாப்பிட்டாலோ அலர்ஜி போன்று முகத்தில் சிவப்பு பருக்கள்  தோன்றும்.  அப்படி பட்டவர்கள் மஞ்சளும் சிறிதளவு வேப்பிலை கலந்து முகத்தில் தடவி 2 நிமிடங்களில் கழுவ வேண்டும்.
 
உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால்  குணமாகி விடும்.  மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.
 
கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.