செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்ட - துளசி இலை வைத்தியம்

1. குளிர்க் காய்ச்சல்:
 
நீலத்துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவிக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தினால் குளிர்க் காய்ச்சல் குணமாகி விடும்.


 
 
2. நரம்புகள் வலிமை பெற:
 
செந்துளசிச் சாற்றை மிளகுக் கஷாயத்துடன் சேர்த்து உட்கொண்டால் நரம்புகள் வலிமை அடையும்.
 
3. நெருப்புக் காயம்:
 
நெருப்பு சூட்ய் காரணமாக ஏற்பட்ட காயம் முற்றிலுமாக ஆற புண் மீது துளசி இலைச் சாற்றையும் தேனையும் கலந்து பூச வேண்டும்.
 
4. மூளை சுறுசுறுப்படைய:
 
நூறு கிராம் அளவுக்கு கருந்துளசி இலைச் சாற்றை எடுத்து கொண்டு 100 கிராம் கற்கண்டு சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி இரண்டு தேக்கரண்டி பசுவின் பாலில் கலந்து சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்ப்டையும்.
 
5. காக்கை வலிப்பு:
 
5 கிராம் அளவுக்கு கடுக்காய் எடுத்து தட்டிப்போட்டு 200 மி.லி நீர் விட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி துளசி இலை, சங்கண் வேர் பட்டை, வெள்ளெருக்கன் வேர் பட்டை இவற்ரை 5 கிராம் அளவு எடுத்து மைய அரைத்து கடுக்காய் கஷாயத்தில் கலந்து 50 மி.லி. அளவு நோயாளிக்கு பல நாள் கொடுத்து வந்தால் காக்கை வலியின் வேகம் வெகுவாக அடங்கிவிடும்.
 
6. இரத்த அழுத்தம்:
 
பூவரசம் பட்டை 250 கிராம் எடுத்து நன்கு இடித்து கஷாயம் செய்து ஒரு வேளைக்கு 50 மி.லி. க‌ஷாயத்துடன் 10 சோட்டு துளசிக் சாறு சேர்த்து தொடர்ந்து சில நாட்கள் உட்கொண்டு வர சருமத்தில் ஏற்பட்ட சொறி அகலும்.
 
7. சருமத்தில் சொறி:
 
துளசி இலை, முற்றிய முருங்கை இஅலை சமாளவு எடுத்து இடித்து 50மி.லி. அளவு சாறு எடுத்து இரண்டு சிட்டிகை சீரகம் பொடி செய்து போட்டு காலை மாலை என 50 நாட்கள் உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் சமனப்படும்.