உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ!

Sasikala|
1. துளசி டீ
 
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு  வருகிறது. துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும்  சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
 
தேவையான பொருட்கள்:
 
துளசி இலை - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
டீத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
பால் - தேவையான அளவு

 
செய்முறை:
 
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும். பின்  டீத்தூள், சர்க்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து  கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.
 
2. செம்பருத்தி டீ
 
இப்பூக்களில் தங்கச்சத்து நிறைந்திருக்கிறது. இதன் மகரந்தத்தை நீக்கி விட்டே சாப்பிட வேண்டும்  சர்க்கரை வியாதிக்கும்  சிறந்த மருந்து.  சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க  பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்.
 
தேவையான பொருட்கள்:
 
செம்பருத்தி இதழ் - 5 இதழ்
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - 1 ஸ்பூன்
 
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். பின் செம்பருத்தி இதழை போட்டு 5 நிமிடம் கொதித்தபின் வடிக்கட்டி  சர்க்கரை போட்டு குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு  நல்லது.
 
3. புதினா டீ
 
தேவையான பொருட்கள் : 
 
புதினா இலை - 5 
தேயிலை - ஒரு டீஸ்பூன் 
தேன் அல்லது பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் 
பால் - கால் டம்ளர்
 
செய்முறை:
 
ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன்  அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது. தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :