வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் பருமனை குறைக்க விரும்புவர்களுக்கு சில எளிய வழிமுறைகள்!

ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.  இதை குறைக்க உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள்.



ஏனெனில், ‘ரெண்டே  இட்லிதான் சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ கலோரி உணவுகள் என்று கைவசம் வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுவது சிறந்தது.
 
தண்ணீர் குடித்தால் எடை குறையும் எப்படி..? சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் பசியையும்,  ‘நிறையச் சாப்பிடணும்’ என்ற ஆர்வத்தையும் தணிக்கும். மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளும்.
 
தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல்  வடிவம் அழகு பெறும். 
 
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து  உடலிற்கு புத்துணர்ச்சி தரும். 
 
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி  தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். 
 
அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை  சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். 
 
மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர  வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை  போடுவதைத் தடுக்கலாம். 
 
இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.