Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சளித்தொல்லையை விரட்ட சில இயற்கை வைத்திய குறிப்புகள்


Sasikala| Last Updated: சனி, 6 பிப்ரவரி 2016 (10:14 IST)
நம்முடைய முன்னோர்கள் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து நோய்களை விரட்டினர். அவை நல்ல பலனை அளித்து வந்துள்ளது.

 

 

 
இப்பொழுது எங்குப் பார்த்தாலும் மழை நீர் தேங்கி பல தொற்று நோய்களையும், காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்படுத்தி வருகிறது.
 
சளி பிடித்தால் மூக்கை வேகமாகச் சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் மூக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச்செவிக் குழாய்க்குள் புகுந்து  காதைச் செவிடாக்கி விடக்கூடும்.
 
சளியை விரட்டும் வழிமுறைகள்:
 
1. கடுகை அரைத்துப் பாதங்களில் பூச, ஜலதோஷம் குணமாகும்.
 
2. சளி மற்றும் தலைபாரம் குறைய , கிராம்பைத் தண்ணீர் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் பலன் கிடைக்கும்.
 
3. சுக்கை சுட்டு பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட உடலிலுள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.
 
4. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக்க, ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும்.
 
5. மூக்கில் சளி ஒழுகாமல் இருக்க: மூக்கில் இடைவிடாது சளி ஒழுகிக் கொண்டே இருக்கும் நபர்கள் வெற்றிலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட சளி ஒழுகுதல் நிற்கும்.
 
6. குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், முருங்கைக் கீரையும், உப்பையும் கசக்கி 3 ஸ்பூன் அளவு கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.
 
7. சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம்.  மூக்கடைப்பு நீங்கும்.
 
8. குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டால், குப்பைமேனி இலையையும், உப்பையும் கசக்கி 5 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் கொடுத்தால் வாந்தியாக வெளியே வந்துவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :