1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பயன்தரும் சில மூலிகைகளும் மருத்துவ குறிப்புகளும்...!

முசுமுசுக்கை இலையை வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, மூச்சு திணறல்  குணமாகும்.
மந்தாரை இலையுடன் கொத்தமல்லி, இஞ்சி, உளுந்து, உப்பு, புளி, மிளகாய் சேர்த்து வதக்கி துவையலாக சாப்பிட்டு வர வாந்தி நிற்கும்.
 
அரசமரக்கொழுந்து, ஆலமரக்கொழுந்து, அத்திமரக்கொழுந்து மூன்றையும் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து சாப்பிட இரத்த மலப்போக்கு  நிற்கும்.
 
விளாம்பழம் தொடர்ந்து சாப்பிட கல்லீரல் நோய் குணமாகும். வெள்ளரிப்பிஞ்சு இருதய நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.
 
பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் ஒட்டி வைத்தால் வலி குணமாகும். இரவில் தலையணையில்  செம்பருத்தி இலைகளை வைத்து படுத்து வந்தால் தலைப்பேன்கள் ஒழியும்.
 
திப்பிலி, சுக்கு, எள் மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனுடன் சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். மூலநோய்க்கு துத்திக்காய் மிகவும் நல்லது.
 
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் காலையில் சாப்பிட்டவுடன் வென்னீரில் தேன் கலந்து குடித்து  வர ஞாபக சக்தி அதிகமாகும்.
 
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட மூட்டு வலி குணமாகும். திருநீற்றுப்பச்சை இலைச்சாற்றை மூக்கில் நுகர தும்மல் வந்து மூளைக் காய்ச்சல் கிருமி வெளியேறும்.