தொப்பையை குறைக்க வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடியுங்கள்....!!

Sasikala|
தொப்பையை குறைக்க வேறு வழியே இல்லையா என்று புலம்புபவர்களுக்கு இளநீர் ஒரு சிறந்த பானம். இளநீரை குடிப்பதற்கென குறிப்பிட்ட  நேரம் எதுவுமில்லை. பகல் பொழுதில் இளநீரை எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம் ஆனால் அதனை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின்  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
 
கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
 
வெறும் 1 வாரம் தொடர்ந்து இளநீர் குடித்து வந்தால் தொப்பை வந்த இடம் தெரியாமல் போய் விடும். உடலில் அதிக அளவில் கெட்ட  கொலஸ்ட்ரால் இருந்தால் அவை இதயம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் நல குறைபாட்டையும் தரவல்லது. ஆனால், நீங்கள் இளநீர்  குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் சீரான ரத்த ஓட்டத்தையும் தரும்.
 
உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் உடல் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்கு வந்து விடும். இதனை சரிசெய்ய நீர்ச்சத்தை வாரி வழங்கும் தன்மை இந்த இளநீருக்கு உள்ளது. இளநீரில் 95% சுத்தமான நீர் தான் இருக்கிறது. ஆதலாம் தினமும் 1 இளநீர் குடித்து  வந்தால் நீர்சத்து குறைபாடு நீங்கிவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :