வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பேரிச்சம் பழத்தில் உள்ள ஏராளமான ஆரோக்கிய நன்மைகள்...!!

பேரிச்சம் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு நோய் வராமலும் காக்கும்.

பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, ப்ரோடீன், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
 
மலசிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 2 முதல் 3 பேரிச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினையை தடுத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். 
 
தினமும் 2 முதல் 3 பேரிச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் தடுக்கும். மேலும் உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்க செய்யும்.
 
பேரிச்சம் பழத்தில் மிகவும் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் காக்க  உதவுகின்றது.
 
பேரிச்சம் பழத்தில் உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான ப்ரோடீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக ஏற்படாமல் தடுக்கும்.
 
ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆண்கள் தினமும் பேரிச்சம் பழத்தினை உண்டு வந்தால் அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியம்  மேம்படும். மேலும் இது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகின்றது.