Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இயற்கையாக கிடைக்கக் கூடிய கீரைகளின் மருத்துவ பயன்களை அறிவோம்...

Sasikala|
வெந்தயக்கீரை: வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு  சத்துக்கொண்டது. இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

 
முருங்கைக் கீரை
 
இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை  அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து  வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்.
 
அரைக் கீரை
 
அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல்  தடுக்கலாம்.
 
சிறு கீரை
 
உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது.  மலச்சிக்கல் குறையும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.
 
அகத்திக்கீரை
 
இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த  சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது. இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் ஏதேனும்  விஷம் இருந்தால் அதை முறிக்கும் திறன் வாய்ந்தது. குடற்புழுக்களை அழிக்கும். அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு  வந்தால் நோய்களை போக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :