வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வில்வம்!!

வில்வம் காய் சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம். இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிதால்  இதனை அனைவரும் வாங்க மறக்க மாட்டார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.
கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு இந்த வில்வ இலை ஒரு  சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து  விடுபடலாம்.
 
வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி  நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரிசெய்ய உதவும்.
 
வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.
 
வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.