1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வீட்டு உபயோபப் பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்!!

வெந்தயம்: உடலின் வெப்பநிலையை சமன்செய்யும். கண் எரிச்சலைப் போக்கி குளிர்ச்சியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலியைச் சமாளிக்க நீர் மோருடன் சிறிதளவு வெந்தயத்தைக் கலந்து குடிக்கலாம்.



கறிவேப்பிலை: சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது. இரும்புசத்துக் குறைப்பாடு, பார்வைக் குறைபாடு, முடி  உதிர்தல் ஆகியவற்றை தீர்க்கும்.
 
கொத்தமல்லி: செரிமானத்தை அதிகரிக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
 
இஞ்சி: பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத் தீர்க்கும்.
 
பூண்டு: கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வாயுத் தொல்லைகள் உருவாகாமல் தடுக்கும். அன்றாடம் அளவுடன் சாப்பிட்டு வர  புற்றுநோய்கள் வராமல் தடுக்கும்.
 
மிளகு: மிகச்சிறந்த மருத்துவ தன்மை கொண்டது. விஷத்தை முறிக்கும். தேனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்து சாப்பிட்டால்,  சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
சோம்பு: வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும். வாந்தியை நிறுத்தும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மணமூட்டியாகச் செயல்படுவதுடன் செரிமான சக்தியையும் மேம்படுத்தும்.
 
சீரகம்: உள் உறுப்புகளைச் சீர்செய்வதால் சீரகம் என்று பெயர் பெற்றது. வயிற்றுப் புண் மற்றும் தலைசுற்றலைச் சரிசெய்யும்.  இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும்.
 
மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின், இதய நோய்கள் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நல்லது. சிலவகைப்  புற்றுநோய்களைத் தீர்க்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.