Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சலை போக்க


Sasikala| Last Modified வெள்ளி, 4 டிசம்பர் 2015 (16:12 IST)
காய்ச்சல் மழைக் காலத்தில் மட்டும் வரவில்லை, எல்லாக் காலங்களிலும் வரும். அதனை தீர்க்க இயற்கை வைத்திய முறைகளை கொண்டு தீர்வு காணலாம்.

 

 
1.வல்லாரை இலை, உத்தாமனி இலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க காய்ச்சல் குணமாகும்.
 
2. திருநீற்று பச்சிலைசாறு, தும்பை இலை சாறு, கற்பூரம் சிறிது சேர்த்து மூக்கில் உறிஞ்ச குணமாகும்.
 
3. கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
 
4. வில்வ இலையை நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதகாய்ச்சல் நீங்கும்.
 
5. மஞ்சளை நல்ல தணல்நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை பொடியாக்கி காய்ச்சலுக்கு கொடுக்க குணமாகும்.
 
6. நாத்தங்காய் செடி இலையை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.
 
7.  துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை , மிளகு, சிற்றரத்தை அரைத்து வெயிலில் காய வைத்து காய்ச்சல் வரும் போது 1/2 கரண்டி காலை, மாலை வெந்நீரில் குடித்து வர காய்ச்சல் குணமாகும். 
 
8. நீலத்துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகி விடும்.
 
9. துளசியுடன் கொஞ்சம் சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் வைத்து உட்கொண்டால் காய்ச்சல் வருவது தவிர்க்கப்பட்டு விடும்.
 
10.  திப்பிலி, குப்பைமேனி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம், இருமல், சுரம் குணமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :