1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (12:39 IST)

பழங்களில் இத்தனை மகத்துவமா!

உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள், அதனால் தான் அவர்கள் நல்ல திடமான உடலுடன் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்ந்தனர். இந்த ஆரோக்கியத்தை நாமும் பெற உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும். இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது சத்தான பழங்கள். அவற்றில் உள்ள சத்துக்களின் மகத்துவத்தை பற்றிய சிறிய அலசல் தான் இந்த பதிவு.

பழங்கள்:

கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவை நம் உடலுக்கு இன்றியமையாதவை. இவைகளை தினமும் பழங்களின் மூலம் நாம் பெறலாம்.

புரோட்டீன் சத்துள்ள பழங்கள்:

புரோட்டின் சத்து மனித தசைகளை வலுப்படுத்துகின்றன. இதனை, பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

கால்சியம் சத்துள்ள பழங்கள்:

கால்சியம் சத்தானது மனித எலும்புகளை வலுப்படுத்தி, எலும்புகளை உருவாக்குகின்றன. இதனை, ஆரஞ்சுப்பழம், திராட்சைப்பழம், கொய்யாப்பழம், தக்காளிப்பழம், பேரிச்சம்பழம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு சத்து பழங்கள்:

இரும்பு சத்தானது ரத்தத்தை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்குவகிக்கின்றது. திராட்சை, ஆப்பிள், பேரிச்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன.

பொட்டாசியம் சத்து:

பொட்டாசியம் சத்து ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பணியில் முக்கியமானது. இந்த சத்தானது வெள்ளரிக்காயில் 43% உள்ளது. ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க வெள்ளரிக்கய் மிகவும் உதவுகின்றன.

பாஸ்பரஸ் சத்துள்ள பழங்கள்:

பாஸ்பரஸ் சத்து மூளையின் பலத்தை அதிகரிக்க முக்கியமானது. மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சத்து உற்பத்தி செய்கின்றன. ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம். மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.