1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தொடர் இருமல் ஏற்படுவதை தடுக்கும் ஆரோக்கிய குறிப்புகள்...!!

வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவேண்டும்.
* வெறும் ஏலக்காயை கடித்து வென்று சாப்பிட்டு வந்தால், இருமல் பிரச்சனை வராது.
 
* ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம். அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும்  குடிக்கலாம்.
 
* நீரில் சிறிதளவு இஞ்சியை தோல் சீவி நறுக்கி போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து  குடிக்கலாம்.
 
* உலர் திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து அதை தினமும் சாப்பிட்டு வர  வறட்டு இருமல் குணமாகும்.
 
* ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கற்கண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் சரியாகும்.
 
* பூண்டு பற்களை எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி பொரித்து அதன் சூடு ஆறுவதற்குள் குடிக்க வேண்டும்.
 
* நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.
 
* புதினாவை அரைத்து சாறு எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவேண்டும்.