Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (19:25 IST)

Widgets Magazine

உடலினுள் நுழையும் புழுக்கள் உணவு மற்றும் தண்ணீரின் வழியாகத் தான் உடலை அடைகிறது. உடலில் புழுக்கள் அதிகம் இருந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும். 


 

 
எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள புழுக்களை அவ்வப்போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வெளியேற்றிவிட வேண்டும். இங்கு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உட்கொண்டு உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  
 
பூண்டு:
 
பூண்டில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை அழித்து வெளியேற்றும். எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதோடு, அவ்வப்போது ஒரு பச்சை பூண்டு சாப்பிட்டும் வாருங்கள்.
 
 வெங்காயம்:
 
வெங்காயத்தில் உள்ள சல்பர், ஒட்டுண்ணிப் புழுக்களை அழிக்கும். அதற்கு வயிற்றை சுத்தம் செய்ய நினைக்கும் போது, 2 டீஸ்பூன் வெங்காய சாற்றினை தினமும் 2 முறை என 2 வாரத்திற்குப் பருக வேண்டும்.
 
தேங்காய் எண்ணெய்:
 
தேங்காய் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இயற்கையான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வளமாக உள்ளது. இவை வயிற்றில் உள்ள புழுக்கை அழித்து வெளியேற்றும்.
 
பூசணி விதை:
 
பூசணி விதை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் இருக்கும ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடி வெளியேற்றும்.
 
பப்பாளி விதை:
 
பப்பாளி விதையும் உடலினுள் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். அதற்கு பப்பாளி விதையை நன்கு உலர வைத்து, சாலட்டின் மேல் தூவி, தினமம் உட்கொண்டு வர, வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம். 
 
அன்னாசி:
 
அன்னாசியில் உள்ள புரோமெலைன் என்னும் செரிமான நொதி, டாக்ஸின்கள் மட்டுமின்றி, புழுக்களையும் வெளியேற்றும்.
 
பாதாம்:
 
பாதாம் வயிற்றில் இருக்கும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழித்து வெளியேற்றும். எனவே பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நீரிழிவு நோயை கட்டுபடுத்தக்கூடிய உணவுமுறைகள்...

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், ...

news

முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கும் இயற்கை வைத்தியம்!!!

அந்த வகையில் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் வெந்தயம். இந்த வெந்தயம் எளிதில் ...

news

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள்...

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…? வெயில் காலம் ...

news

வயிறு மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் வெந்தயத்தில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை ...

Widgets Magazine Widgets Magazine