வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வரகு...!

வரகு என்பது நவ தானியங்களில் ஒன்று. நமது பழந்தமிழர் வாழ்விலும் ஆன்மீக ரீதியிலும் பின்னிப் பிணைந்திருந்தது. நமது வேக  வாழ்க்கையில் நாம் மறந்து போன வரகை நாம் மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்தால் நம் வாழ்க்கைக்கு மீண்டும் வரமாக நம் ஆரோக்கியத்தை  திருப்பித் தரும்.
வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம்  அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். 
 
ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது. நடுவயது, முதிர்ந்த வயதினருக்கும்வரும் மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி, அவர்கள் ஓரளவு சுகத்தை தருகிறது.
மாதவிடாய்கோளாறுகளால் அதிகளவு பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரத்த‍ போக்கு  சீரடையும், வயிற்று வலியும் குறையும் என்கிறார்கள் சித்த‍ மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.
 
நம் வாழ்வில் எல்லா தானியங்களையும் நாம் இயற்கைப் பேரழிவுகளில் இழந்துவிட்டாலும், வரகு என்ற தானியம் மட்டும் நாம் இழந்துவிடாமல் இருக்க நம் முன்னோர்கள் வரகு என்ற தானியத்தை கோவில் கோபுரக் கலசங்களில் வைத்து பாதுகாத்துள்ளார்கள். வரகு  என்ற தானியம் கோவில்களில் இடி விழாமல் காக்க வல்லது என்பதும் ஒரு காரணம்.
ஏனெனில் முளைப்பதற்கு முன்னர் உறக்க நிலையில் இருக்கும் தானியத்தில் ஒரு உயிரோட்டம் எப்போதும் இருக்கும். அந்த உயிரோட்டம்  எப்போதும் அதன் முளைப்புத் திறனை பாதுகாப்பதுடன் அதைச் சுற்றி ஒரு காந்தப் புலத்தையும் உருவாக்கி வைத்துள்ளது. அந்தக் காந்தப்  புலம் பன்னிரெண்டு ஆண்டுகள் அதிக அளவில் நிலைத்திருப்பது வரகு தானியத்தில் மட்டுமே. எனவேதான் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு  முறை அஷ்ட பந்தன மஹா கும்ப அபிஷேகம் என்ற பெயரில் கும்பங்களில் உள்ள வரகு தானியத்தை மாற்றி, அதன் காந்தப் புலத்தை  அதிகப்படுத்தி வைப்பார்கள்.
 
இவ்வளவு காந்தப்புலம் கொண்ட வரகை உள்ளே சாப்பிட்டால் நமது வான் காந்த ஆற்றல் அதிகரிக்கும். இதனால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நிலைப்படுத்துவது, இந்த வான் காந்த ஆற்றலேயாகும். 
 
எனவே நோயற்ற வாழ்வு வாழ வரம் தரும் வரகு என்ற தானியமே. அதுவும் உரம் போடாத, பூச்சி மருந்து அடிக்காத வயலில் இயற்கையாக விளைந்த வரகு மிக, மிக உயர்ந்த பலன்களை அளிக்க வல்லது.