வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு

உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு

வைட்டமின் சி, பி6, மாங்கனீஷ் நிறைந்துள்ளன. அணுக்களின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. பூண்டில் உள்ள சல்பர் கிருமிகளை அளிக்க வல்லது. இது இரண்டு வகையான ஆண்டி பயாடிக்சைஸ உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 வகையான பாக்டீரியாக்களை அழித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.


 
 
* இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். பூண்டில் உள்ள விட்டமின் பி மற்றும் கே உடலுக்கு தேவையான சக்தியை சீராக செம்மை படுத்தி பலம்பெற செய்கிறது.
 
* காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். குடலில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
 
* இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் ஓட்டம் சீராக இருக்க ஏதுவாகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
 
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டில் உள்ள சல்பர்,மற்றும்  குளோரின்  நமது மூளையில் உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது.
 
* எலும்புகளை உறுதி செய்யும். பல் வலியைக் குறைக்கும். மறதி நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். பூண்டில் உள்ள சல்பர் மற்றும் ஆண்டி  ஆக்ஸ்டன்ஸ் கருப்பையை வலுவாகி மாதவிடாய்க் கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது.
 
* உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். மலச்சிக்கல் உண்டாகி வாய்வு உண்டாகி அஜீரணக்கோளாறு புளிப்பு வயிற்று பொறுமல் வயிற்று எரிச்சல் போன்றவை உண்டாகி பாடாய் படுத்தும் தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் இவை அனைத்தையும் தடுத்து குடலில் உள்ள புழுக்களை அகற்றி பசியைத் தூண்டும்.