வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவகுணம் நிறைந்த மல்லிகையை எதற்கு? எப்படி பயன்படுத்துவது...?

மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும். மல்லிகைப் பூக்களை நன்றாக கசக்கி நெற்றியின் ஒரு புறங்களிலும் தடவி வர தலைவலி குணமடையும்.
மல்லிகைக் பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தலர்ச்சி நீங்கும்.
 
மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அரிந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி  குறையும்.
 
மல்லிகைப் பூவை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடித்து வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்சினைகள் குணமடையும்.
பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெய் பயன்படுத்தலாம். நாள்பட்ட தழும்புகள் அரிப்புகள்  குணமடையும்.
 
மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல்  நோய்கள் நீங்கும்.