உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும் உணவுகள் !!

Sasikala|
உணவில் அடிக்கடி பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து கொள்ளும் போது நம்முடைய மூட்டுகளுக்கு வலிமையை தருகிறது. இதில் அதிக அளவு சல்பர் உள்ளதால் நம்முடைய எலுமிகளுக்கு தேவையான சக்தியை தருகிறது.

உணவில் அதிக அளவு கீரை, மற்றும் தானிய வகைகளை சேர்த்து கொள்வதால் நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். மேலும் நொறுக்கு  தீனியை சாப்பிடுவதற்கு பதிலாக தானிய வகைகளை சேர்த்து கொள்வதால் நம்முடைய எலும்புகளுக்கு வலு கிடைக்கும்.
 
பால், தயிர், மற்றும் பாலில் செய்த உணவு பொருட்களை அதிகம் எடுத்து கொள்வதால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைக்கும். 
 
தினமும் உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக நம்முடைய எலும்புகளுக்கு நாம் வேலை கொடுப்பதால் நம்முடைய எலும்புகளுக்கு தேவையான சக்தியை பெறலாம்.
 
குழந்தைகளை காலையில் சூரிய வெளிச்சம் படுமாறு எடுத்து செல்வார்கள் பெரியவர்கள். அதில் முக்கிய மருத்துவ குணம் உள்ளது. அதிகாலையில் சூரிய  வெளிச்சம் நம் மீது படுவதால் நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலுவை தருகிறது.இதற்க்கு காரணம் அதிகாலையில் நம் மீது படும் சூரிய  வெளிச்சம் வைட்டமின் டி சக்தியை தூண்ட உதவுவதே ஆகும்.
 
டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது எலும்புகளுக்கு நல்லதல்ல. எனவே டீ மற்றும் காபியின் அளவை குறைத்து கொள்வது நல்லது. அதிக புரதம் உள்ள உணவுகளான இறைச்சியை குறைத்து கொள்வது நல்லது. 


இதில் மேலும் படிக்கவும் :