வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பகல் நேரத்தில் தூங்குவதால் பாதிப்புகள் ஏற்படுமா...?

காலையில் சாப்பிடும் நேரம் தாண்டித் தூங்கிக் கொண்டிருப்பது அல்லது மதியம் முதல் மாலை வரை தூங்குவது போன்ற செய்கைகளால் உடலின் சமநிலை  பாதிக்கப்பட்டு விடும். அதனால் தேவையில்லா நோய்கள் உடலைத் தாக்கலாம்.

இரவு நேரம் வெகு நேரம் வரை வேலை செய்வதால் உடல் சூடு அடையும். இதனால் பல்வேறு வியாதிகளைச் சந்திக்க நேரும். குறிப்பாக கண்களும், மூளையும்  தாக்கப்படும்.
 
உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் விட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப்பெற இயலும். இவர்கள் காலை நேரத்தில் தூங்குவதால் இளஞ்சூரிய வெயில் உடலில் பட வாய்ப்பு ஏற்படாது. இதனால் இவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும். ஆக இயற்கையாக பெற இயலும் ஒரு சத்தை, காலை  நேர தூக்கம் கிடைக்காமல் செய்துவிடும்.
 
தாமதமாக எழும் பொழுது தேவையில்லாத மன அழுத்தங்கள், மனக் குழப்பங்கள் ஏற்படும். ஒரு ஒழுங்கான தூக்க முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த  பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
 
காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி, யோகாசனங்கள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம், உடலின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும். அந்த வாய்ப்பை இழக்காமல் இருக்க இரவில் சீக்கிரம் தூங்கி பகலில் நேரமாக எழுந்து கொள்வது நல்லது.
 
வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு காலையில் படுக்கவே கூடாது.இதனால் செரிமான பிரச்சனை,உடல் எடை அதிகரித்தல் போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.