ஞாயிறு, 24 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா...?

ஐஸ்கிரீம் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள். இதில் உடல் நலனை கெடுக்கும் பல்வேறு வேதி பொருட்கள்  சேர்க்கப்படுகின்றன. 
ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால் கெடாமல் இருக்க சோடியம் பென்சோயேட் எனப்படும் அழகு சாதன பொருள்  பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கை நிறமிகள் சர்க்கரை பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி சேர்க்கப்படுகிறது.

ஐஸ்கிரீம் எளிதில் உருகாமல் இருக்க சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் polysorbate-  80 என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது புற்று நோய்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
 
ஐஸ்கிரீம் வாயில் போட்டவுடன் கரைய சில வேதிப்பொருளை சேர்க்கின்றனர். சோடியம் பென்சோயேட் எனும் வேதிப்பொருள் ஐஸ்கிரீமின் சுவைய அதிகமாக்கி நம்மை திரும்ப திரும்ப சாப்பிட தூண்டுகிறது.
 
சிலர் ஐஸ் கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் என்கிற பொருளை சேர்க்கின்றனர். இந்த வேதி பொருள் வலி நிவாரணியயாக பயன்படுகிறது. இது சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
அல்சர், புற்றுநோய், இதயவலி போன்ற நோய்களை உருவாக்கும். ஆகவே, ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்ப்பதே உடலுக்கு நல்லது. அடிக்கடி சாப்பிட்டால் உடலை ஆரோக்கிய கேட்டினை ஐஸ் கிரீம் உருவாக்கும்.