வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

டெங்கு காய்ச்சலை இயற்கையான முறையில் தடுக்கும் வழிமுறைகள்!!

பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே எடுக்க வேண்டியதும் அவசியமாகும். டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக்கொள்வது நல்லது.
 
கொசுக்கடியில் இருந்து காக்கும் மிகச்சிறந்த கிருமிநாசினி தேங்காய் எண்ணெய் ஆகும். டெங்கு கொசுக்களால் அதிக உயரமாக பறக்க முடியாது. எனவே, டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. அதற்குத் தகுந்தாற் போல ஆடைகளை அணிவது நல்லது எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு…
 
* ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக உப்பு போட்டுக் குடிக்கலாம்.
 
* தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம். நிலவேம்பு கஷாயம் செய்து சாப்பிடலாம்.
 
* நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது.
 
* சீந்தில் கொடியின் தண்டு, வில்வ இலை, துளசி,  மஞ்சள், நெல்லிக்காய், பளிங்கு சாம்பிராணி,  திப்பிலி ஆகிய மூலிகைகள் நோய் எதிர்ப்புச் சக்தியை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
 
* கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முட்டை, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.