1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பிரச்சனை ஏற்படுகிறது.

PCOD என்பது PCOS-ன் முந்தைய நிலைதான். கருப்பையில் கட்டிகள், இன்சுலின்  செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள். உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.
 
பிசிஓஎஸ் உள்ள பெண்களில், சினை முட்டைகன் முதிர்ச்சி அடைய தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சினை முட்டைகள் முழு வளர்ச்சி  அடையாமல், சிறிதளவு வளர்ந்து நீர் நிறைந்த சிஸ்ட்டுகளாக கட்டிகளாக நின்று விடுகின்றன. முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் (அண்டவிடுப்பின்) நடப்பதில்லை. இந்த ஹார்மோன் இல்லாமல் போனால், பெண்ணின் மாத சுழற்சியும் நின்று விடும். போதாக்குறைக்கு, நீர்க் கட்டிகள் ஆண்  ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனால் ஒவியுலேசன் தடைப்படும்.
 
இதனால் பெண்களின் மாதாந்திர Cycle, முறையற்ற மாதவிலக்கு, மாதவிலக்கே வராமல் போவது, உடல் பருமன் அடைவது, உடலில் முடிவளர்ச்சி  இருப்பது, மற்றும் முகப்பரு போன்ற தோல் தொடர்பான வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. 
 
இதற்கு இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் தூவி  கொள்ளலாம்.
 
நீர்க்கட்டி பிரச்சனை சரியாக ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா மற்றும் புரத சத்துகள் உதவுகின்றன. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம்.