வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2015 (15:55 IST)

இரத்தக் கொதிப்பை குறைக்கும் அகத்திக்கீரை

கண்களில் எரிச்சல் இருந்தாலும் அதை நீக்கி குளிர்ச்சியைக் கொடுக்கும். இரத்தக் கொதிப்பு என்பது பல தொல்லைகளை அளிக்கவல்லது. அவர்கள் அகத்திக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு குறையும்.


 
 
1. சத்து மிகுந்த கீரைகளுள் அகத்திக் கீரை ஒன்று. உடலில் ஏற்படும் மூலாதாரமான நோய்களைக் குணமாக்கவல்லது. இதில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்தும், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும், புரதம், இரும்பு மற்றும் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை அளிக்க வல்லது.
 
2. உஷ்ணத்தினால் ஏற்படும் காய்ச்சல், வறட்டு இருமல் தும்மல் போன்ற தொல்லைகளிலிருந்து நிவாரணம் அளிக்க வல்லது.
 
3. வாத நோயையும் நீக்கும் கபம் அதிகரிப்பு இருந்தாலும் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
 
4. இதயம், மூளை, கல்லீரல் மற்றும் சீரண மண்டல உறுப்புகளுக்கு வலிமையை அளிக்க வல்லது.
 
5. கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் அதைக் குணமாக்க அகத்திக்கீரையை வேகவைத்து, அதன் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம்.
 
6. அகத்திக்கீரையை சமைப்பதற்கு முன் நன்றாக நீரில் அலசி கழுவ வேண்டும். பின் அதை நன்றாக வேகவைத்து பின்னர் உண்ண வேண்டும்.
 
7. அகத்திக் கீரையை வாயிலிட்டு நன்றாக மென்று அரைத்துக் தின்ன வேண்டும், அரைகுறையாகக் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்பட்டுவிடும்.
 
8. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக் கீரையை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் மருந்தின் சக்தியை  முறித்துவிடும்.
 
9.வயிற்றிலுள்ள புழு பூச்சிகளையும் கொல்லும். மதுபானப் பழக்கம் உள்ளவர்களும் அகத்திக் கீரையை சாப்பிடாமல் இருப்பது நல்லது.