வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (16:02 IST)

விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இன்று விமானப் பயணிகள் மகிழ்ச்சியடையும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விமானப்பயணத்தின் போது இனி செல்பேசி மற்றும் லேப்டாப்களை ஆஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற அறிவிப்பே அது.
 
அதாவது 'ஃபிளைட் மோட்'-இல் போடுமாறு இனி விமானப் பணிபெண்கள் அறிவுறுத்துவார்கள்.
 
இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். 
 
அதே போல் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது.