1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bala
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (13:05 IST)

ராதே மா முதல் நித்யானந்தா வரை: சர்ச்சை சாமியார்கள்

அஸராம் பாபு, ராதே மா, நாராயண் சாய், சாரதி பாபா போன்ற சாமியார்கள் சமீபகாலமாக செய்திகளில் வலம் வருகிறார்கள். மோசடி, ஆபாசம், வரதட்சணை, கற்பழிப்பு, கொலை போன்ற சமூக விரோத செய்திகளாகவே இந்த ஆன்மீக குருக்கள் பேசப்படுகிறார்கள்.






















ராதே மா:

ராதே மா தான் நடிகர் மற்றும் முன்னாள் ஆபாச திரைப்பட நட்சத்திரம் சன்னி லியோனின் ரசிகை என கூறியிருந்தார். அவருடைய அளவு குறைவான உடை அணிந்த புகைப்படம் மற்றும் ஆன்மீக உரைகளின் போது பாலிவுட் பற்றி பேசுவது போன்றவை சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.சர்சைக்குரிய இந்த பெண் சாமியார் ராதே மா மீது ஒரு வரதட்சணை வழக்கிலும் குற்றம் சட்டப்பட்டுள்ளது. பலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கிலும் இவர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளது.

அஸராம் பாபு:

73 வயதான அஸராம் பாபு கடந்த 2013ல் ஒரு சிறுமி மீது பாலியல் தாக்குதல் செய்ததால் ஜோத்பூரில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஜோத்பூரில் அவரது ஆசிரமத்தில் ஒரு சிறிய பெண்ணை பாலியல் தொல்லை செய்ததால் ஜோத்பூர் நீதிமன்றம் ஆசாராம்க்கு எதிராக கற்பழிப்பு, கிரிமினல் சதி மற்றும் இதர குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைத்துள்ளது.

நாராயண் சாய்:

சாமியார் ஆசாராம் மகன் நாராயண் சாய் மீது கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான செக்ஸ் தொல்லை, சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், சட்டவிரோத கூட்டம், கிரிமினல் மிரட்டல் மற்றும் கிரிமினல் சதி போன்ற ஐபிசி பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 43 வயதான சாய் மீது கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டு 2002 முதல் 2005 வரையில் அவரது ஆசிரமத்தில் உள்ள ஒருவரை அங்கு தங்கியிருந்தபோது மீண்டும் மீண்டும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

சாரதி பாபா

சாரதி பாபா என்ற சந்தோஷ் ராவுல்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் இவர் மீது ஏமற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தற்ப்பொழுது இவர் ஒடிஷாவில் உள்ள கட்டக் சிறையில் உள்ளார்.

ஸ்வாமி நித்யானந்தா;

2010ல் நித்யானந்தா பிரபல நடிகையுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் தொலைக்காட்ச்சிகளில் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல புகார்களும் அவர் மீது உள்ளன.

இந்த சாமியார்கள் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள்.