வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Updated : புதன், 16 ஏப்ரல் 2014 (06:41 IST)

பெண்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் மோடி - ராகுல் தாக்கு!

குஜராத்தில் இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில், "பெண்களின் தொலைபேசி உரையாடல்கள் குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், குஜராத் முதல்வர் பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசி வருகிறார்" என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளார்.
இதுகுறித்து புனேயில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பேசியதாவது:-
 
குஜராத் முதல்வர், பெண்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்கிறார். அங்கு காவல்துறையினர் பெண்களை மதிப்பதில்லை. பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
 
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலை மோசமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 20 ஆயிரம் பெண்கள் மாயமாகியுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் பெரிய அளவில் முயற்சிகளை எடுத்தது. ஆனால் பாஜக பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மோடி பொதுக்கூட்டங்களுக்காக மட்டும் ரூ.10 கோடியை செலவிடுகிறார். செய்தித்தாள் விளம்பரங்களுக்காக அதிகளவில் பணம் செலவிடப்படுகிறது. இந்த பணம் குஜராத் 'மி்ட்டாய்' மாடல் என்பதிலிருந்து வந்தவை என்று ராகுல் பேசினார்.
 
இதற்கு முன்பாக, நேற்று மகாராஷ்டிராவின் லதூர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குஜராத் மாடல் என்பதை 'மிட்டாய் மாடல்' என்று நக்கலடித்தது குறிப்பிடத்தக்கது.