1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 12 மே 2014 (18:29 IST)

தெலங்கானா, சீமாந்திரா உள்ளாட்சித் தேர்தல்: சீமாந்திராவில் காங்கிரஸ் படுதோல்வி

உள்ளாட்சித் தேர்தல்களில் சீமாந்திராவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியையும் தெலங்கானாவில் அமோக வெற்றியையும் பெற்றுள்ளது.
 
ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா – சீமாந்திரா உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இரு மாநிலம் உருவாக உள்ளது. 2 மாநிலத்துக்கும் கடந்த மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 10 மாநகராட்சி, 145 நகராட்சிகளுக்கு மார்ச் 30 ஆம் தேதியும், மற்றும் ஊராட்சி பதவிகளுக்கு ஏப்ரல் 6, 11 ஆம் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
 
உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வழக்கு தொடரப்பட்டதை அடுத்து வாக்கு எண்ணிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த இரு மாநிலத்திலும் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் சீமாந்திராவில் 36 நகராட்சிகளை தெலுங்குதேசம் கைப்பற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 934 உள்ளாட்சி இடங்களை தெலுங்குதேசமும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 634 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஆனால் காங்கிரஸால் வெறும் 45 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. அதே நேரத்தில் தெலுங்கானாவில் 9 நகராட்சிகளை காங்கிரஸ் கட்சியும் 5 நகராட்சிகளையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கைப்பற்றியுள்ளன.