1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (18:19 IST)

ஓரினச்சேர்க்கை மறுசீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
 
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் இடமுள்ளது எனறு தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான அமைப்புகள் இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மறுசீராய்வு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.