வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2014 (15:26 IST)

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய அமீர் கான்

ஆம் ஆத்மி கட்சியை பிரபலப்படுத்த அமீர் கானின் புகைப்படம் அவருடைய அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்தப்பட்டதால், இது குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பிரபல இந்தி நடிகர் அமீர் கான், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில், ஆம் ஆத்மி கட்சியை பிரபலப்படுத்த என்னுடைய அனுமதி இல்லாமல் எனது புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது.
 
இது மக்கள் மத்தியில் நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்னும் தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் அனைவரும் தவறாமல் வாக்களிக்கக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன், ஆனால், எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார் என தெரிகிறது.
 
 

மேலும், பல ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் டிவிட்டர் போன்ற இணையதளங்களில், அமீர் கான் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது போல கருத்துக்களை பரப்பிவருவதாகவும்,

அமீர் கானுக்கு அவரது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.