வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (10:25 IST)

ஜிகா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை டெல்லியில் திறப்பு

ஜிகா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை டெல்லியில் திறப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தாக்குதல் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிந்துகொள்ள டெல்லியில் 24 மணிநேர சேவை மைய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.


 
 
பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் வைரஸ் நோயான ஜிகா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இதையடுத்து இந்த கொடிய வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
 
அதேபோல், ஜிகா வைரஸ் பரப்பும் நோயை தடுக்க அனைத்து ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசும் கூறியிருந்தது.
 
இந்நிலையில், ஜிகா வைரஸ் குறித்து தகவல் அறிய டெல்லியில் 24 மணிநேரமும், வாரத்தின் ஏழுநாட்களும் செயல்படும் சேவை மைய கட்டுப்பாட்டு அறையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தொடங்கப்பட்டுள்ளது. 
 
கட்டுப்பாட்டு அறைக்கு 23061469, 23063205 ஆகிய எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் குறித்து அறிவதற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் பிப்ரவரி இறுதிக்குள் ஆய்வகங்கள் வரும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கர்ப்பிணி பெண்கள் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையில்லாமல் செல்ல தடை விதிப்பது, போன்ற பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.