வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2017 (14:58 IST)

மலம் கழிக்க சென்றவர்களால் பெரும் விபத்து தவிர்ப்பு

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று காலைக்கடன் கழிக்கவந்த வாலிபர்கள் விரிசல் அடைந்த தண்டவாளத்தை கண்டறித்து தகவல் தெரிவித்தனர். இதனால் பெரும் ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டது.


 

 
மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்ஹம் மாவட்டத்தில் உள்ள பிராண்டிக் போல்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள திறந்த வெளியில் மலம் கழிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் சென்றுள்ளனர்.
 
அப்போது அங்கிருந்த தண்டவாளத்தில் பெரும் விரிசல் இருப்பதை கண்டுள்ளனர். அதே நேரத்தில் அவ்வழியாக ரெயில் ஒன்று வந்துக்கொண்டிருந்துள்ளது. இதைக்கண்ட அந்த வாலிபர்கள், ரெயில் தண்டவாளத்தில் குறுகே நின்று ரெயிலை நிறுத்தும்படி கையசைத்துள்ளனர்.
 
இவர்களை கண்ட ரெயில் ஓட்டுநர் எச்சரிக்கை அடைந்து ரயிலை நிறுத்த முயற்சித்தார். என்னினும் விரிசல் அடைந்த தண்டவாளத்தில் ரெயில் என்ஜின் மற்றும் முதல் இரண்டு பெட்டிகள் கடந்து சென்றுவிட்டன. ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
 
வாலிபர்கள் பார்க்காமல் இருந்தால் இன்று ரெயில் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.