Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாணவியை உயிருடன் தீவைத்து எரித்த இளைஞன்: நெஞ்சை உறைய வைக்கும் பகீர் சம்பவம்!

மாணவியை உயிருடன் தீவைத்து எரித்த இளைஞன்: நெஞ்சை உறைய வைக்கும் பகீர் சம்பவம்!


Caston| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (18:14 IST)
ஒடிசா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் திவ்யா என்ற மாணவியை தாஸ் என்ற நபர் அவரது வீட்டிற்குள் நுழைந்து மண்ணெண்ணையை மாணவியின் உடலில் ஊற்றி அவரை உயிருடன் துடிக்க துடிக்க எரித்து கொன்றுள்ளார்.

 
 
ஒடிசாவின் பவானிபாட்னா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார் திவ்யா என்ற மாணவி. அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது தாஸ் என்ற நபர் அவரது நண்பர்களுடன் சேர்ந்த கிண்டல் செய்துள்ளார்.
 
இதனால் கோபமடைந்த திவ்யா தாஸை கோபமாக திட்டிவிட்டு தனது பெற்றோர்களிடமும் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து திவ்யாவின் பெற்றோர்கள் தாஸை கண்டித்தனர். இந்நிலையில் நடந்த சம்பவங்களால் கோபமடைந்த தாஸ் நேற்று தனது நண்பர்களுடன் திவ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் தாஸ்.
 
அப்போது திவ்யாவின் அப்பா வீட்டில் இல்லாததால் அவரது அம்மா தாஸை விரட்ட அவரது கணவரை அழைக்க வெளியே சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தாஸ் மண்ணெண்ணையை திவ்யாவின் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
தீயில் கருகிய திவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் திவ்யாவின் உடல் 90 சதவீதம் தீயில் கருகி இருந்ததால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார் திவ்யா. இதனையடுத்து தாஸும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :