Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல்வரின் அந்தரங்க உல்லாச புகைப்படங்கள்: வெளியிட்ட இளைஞர் அதிரடி கைது!

முதல்வரின் அந்தரங்க உல்லாச புகைப்படங்கள்: வெளியிட்ட இளைஞர் அதிரடி கைது!


Caston| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (10:29 IST)
உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத் முதல்வராகா தேர்வு செய்யப்பட்டார்.

 
 
இந்நிலையில் துறவியாக உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள புரோஃபஸர்ஸ் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்ற இளைஞர் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கி அதில் இருந்து இந்த புகைப்படங்களை வெளியிட்டார் என்ற தகவல் கிடைத்தது. இது சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவியது.
 
இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்ய சில இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முதல்வர் ஆதித்யநாத்தின் புகைப்படங்களை வெளியிட்ட அப்துல் ரசாக் என்ற இளைஞரை கைது செய்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :