வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (18:44 IST)

செல்ஃபி ஸ்டிக்கில் 2 கிலோ தங்கம் கடத்திய வாலிபர் கைது

செல்பி கேமரா ஸ்டிக்கில் 2 கிலோ தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார். மேலும், அவரிடம் இருந்து பையை பறித்து தப்பிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
 

 
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் முகமதுயாசின் (35) மேற்குவங்க மாநிலத்தின் அவுராவில் இருந்து கோழிக்கோட்டுக்கு ரயிலில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ரயில் பாலக்காடு ஸ்டேஷன் அருகில் வரும் போது, முகமது யாசினிடம் இருந்த பையை 3 பேர் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து தப்ப முயன்றனர்.
 
இதை கண்ட பாலக்காடு ரயில்வே போலீசார் அந்த 3 பேரையும் துரத்திச்சென்று கைது செய்தனர். பிடிபட்டவர்கள் காசர்கோடு முகமது இக்பால் (29), போதுர்கா அர்பத் (24) அப்துல் ரசீத் (27) என தெரிந்தது. இது குறித்து முகமது யாசின், புகார் கொடுக்க ரயில்வே காவல் துறையினரிடம் வந்தார்.
 
அப்போது, அவரிடம் விசாரணை செய்த காவல் துறையினர் அந்த பையை சோதனை இட்டனர். அதில் செல்ஃபி எடுக்கும் ஸ்டிக் ஒன்று இருந்தது. அந்த ஸ்டிக்கை பிரித்து பார்த்த போது உள்ளே சுமார் ரூபாய் 47லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
 
இதனை அடுத்து முகமது யாசின் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.