Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளம்பெண்ணின் உதட்டைக் கடித்த மர்ம நபர் - தொடரும் பாலியல் பலாத்காரம்

சனி, 7 ஜனவரி 2017 (13:12 IST)

Widgets Magazine

வீட்டிற்கு செல்லும் இளம்பெண்ணை பின் தொடர்ந்த மர்ம நபர், அப்பெண்ணின் உதட்டைக் கடித்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் பெங்களூரில் தொடச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு புது வருட கொண்டாட்டத்தின் போது, எம்.ஜி.சாலையில் சில பெண்களை சிலர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர். அந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பின்னரே போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 
அதன் பின் அடுத்த நாள் அதிகாலை கம்மன ஹள்ளி 5வது சாலையில், தனது வீட்டிற்கு நடந்து கொண்டிருந்த இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டையே உலுக்கியது. அதில் தொடர்புடைய சில வாலிபர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில், அதேபோல் ஒரு சம்பவம் பெங்களூரில் மீண்டும் நடந்துள்ளது.  ஷாப்பிங் மாலில் ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர், நேற்று அதிகாலை கே.ஜி.ஹள்ளி அருகே உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 
 
அப்போது சொட்டர் மற்றும் குல்லா அணிந்து அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர் திடீரென அவரை கட்டிப்பிடித்ததோடு, அந்த பெண்ணின் உதடு மற்றும் நாக்கை கடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அவரின் முகம், கை கால்களில் கடித்து விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றான். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய சிலர், அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
 
இதன்பின் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்ணை, அந்த மர்ம நபர் பின் தொடர்ந்து வருவது மட்டும் பதிவாகியுள்ளது. அதைவைத்து அந்த மர்ம நபரை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
 
தொடர்ச்சியாக இளம்பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமெரிக்க சேவை மையத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெயரில் ...

news

சின்னம்மாவின் ஆணைக்கிணங்க.. நாஞ்சில் சம்பத் அந்தர் பல்டி

அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று காலை போயஸ் கார்டன் சென்று அதிமுக ...

news

அதிமுக-வை உடைக்கும் முயற்சி? சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி!

சசிகலா தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அதிமுகவை உடைக்கும் ...

news

சசிகலா முதலமைச்சர் ; கவர்னர் மவுனம் : கலக்கத்தில் கார்டன்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல் அமைச்சராக பதவி ஏற்பது குறித்து ஆளுநர் மாளிகைக்கு ...

Widgets Magazine Widgets Magazine