Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகளை கள்ளக் காதலர்களுக்கு விருந்தாக்கிய தாய்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (14:43 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பின்மை அதிகமாகிவிட்டது. 

 
 
இதிலும் கொடுமை என்னவெனில் தந்தை, தாய் போன்ற உறவினர்களாலேயே பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது தான்.
 
அந்த வகையில் ஹரியானாவில் படிக்கும் 16 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. 
 
அந்த மூன்று பேரும் சிறுமியின் தாயின் கள்ளகாதலர்கள் என்றும் இவை அனைத்தும் சிறுமியின் தாயின் ஒத்துழைப்புடன் நடந்துவந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாய் உள்ளது.
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் காதலர்கள் 3 பேர் அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அப்போதெல்லாம், அந்த சிறுமியையும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 
 
இதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை வீடியோ எடுத்து இண்டர்நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி அடித்து துன்புருத்தியுள்ளனர்.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மிரட்டலையும் மீறி போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில், சிறுமியின் தாய், அவளது கள்ளக்காதலர்கள் ரம்பாகத், தினேஷ், கமல் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :