வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 நவம்பர் 2018 (16:03 IST)

தலித் இனத்தை சேர்ந்தவர் அனுமான்: ஓட்டுக்காக கதையளக்கும் பாஜக!

ராஜாஸ்தானில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்காக உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 
பிரச்சாரத்தின் போது அவர் பின்வருமாறு பேசினார், அனுமான் ஒரு தலித். அவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் இந்தியா முழுக்க இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ராமரின் ஆசையும் அதுதான். 
 
தெற்கும் வடக்கும், மேற்கும் கிழக்கும் இணைந்து இருக்க ஆசைப்பட்டார். அதை நாம் நிறைவேற்ற வேண்டும். பாஜக அதை நிறைவேற்றும். இதனால் தலித்துகள் கண்டிப்பாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். 
பாஜகவின் ஆசையையும், ராமரின் ஆசையையும் நிறைவேற்ற பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த யுத்தத்தில் அனுமார் படைதான் வெல்ல வேண்டும். நாங்கள் ராமர் படை, காங்கிரஸ் ராவண படை. 
 
ராமர் ஆட்சி வேண்டுமென்றால் பாஜகவிற்கு வாக்களியுங்கள். ராவணன் வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். பிரச்சாரம் முழுவதையும் ராமாயணத்தோடு ஒப்பிட்டு பேசி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் யோகி ஆதித்யநாத்.