Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

24 எம்எல்ஏக்களின் கூடுதல் ஆதரவு: அதிரடி காட்டும் எடியூரப்பா...

Last Modified வியாழன், 17 மே 2018 (16:22 IST)
கர்நாடக தேர்தலில் இரு பெரிய கட்சிகளும் பெரும்பான்மையை பெறாத நிலையில், யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பம் நீடித்து வந்த போது ஆளூநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது.
 
அதன்படி இன்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார். இது கார்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், எடியூரப்பா அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து இருந்தாலும் கூடிய விரைவில் சட்டசபையை கூட்டுவேன்.  
 
நாளையும் நாளை மறுநாள் மட்டும் காத்திருங்கள், உங்களுக்கே முடிவு தெரியும். எங்களிடம் 104 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு சுயேச்சை எம்எல்ஏ எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன்.
 
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முடிவு தெரியும். மனசாட்சிபடி வாக்களியுங்கள் என எம்எல்ஏக்களை கேட்டுக்கொள்கிறேன். இன்னும் 24 எம்எல்ஏக்கள் கூடுதலாக எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :