ஒரு லட்சம் விவசாய கடன் தள்ளுபடி - முதல்வர் எடியூரப்பா முதல் அறிவிப்பு

Last Updated: வியாழன், 17 மே 2018 (12:59 IST)
கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

 
கர்நாடகாவில், பல களோபரங்களுக்கும் இடையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று காலை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதை எதிர்த்து மஜத-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் உத்தரவாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் ஆவணத்தில் எடியூரப்பா கையெழுத்திட்டுள்ளார். அதாவது ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன்களை அவர் தள்ளுபடி செய்துள்ளார்.
 
சட்டசபையில் மெஜாரிட்டி, தர்ணா போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு என பலத்த பரபரப்புகளுக்கிடையே முதல்வராக எடியூரப்பா செயல்பட தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :