வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (11:40 IST)

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் தருவதாக அறிவித்த தொழிலதிபர் கைது

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் தருவதாக அறிவித்து சுமார் 30ஆயிரத்துக்கும் அதிகமான பேர்களிடம் பணம் பெற்ற ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின், நிறுவனர் மோகித் கோயல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
உபி மாநிலத்தை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகிலேயே குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் தருவதாக அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.251-க்கு அறிமுகம் செய்வதாகவும், இந்த போனை வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது
 
இந்த அறிவிப்பை நம்பி ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் அந்த நிறுவனத்தின் இணையதளமே முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.. 
 
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி முன்பணம் பெற்றவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மோகித் கோயல் திடீரென டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஸ்மார்ட்போன் தருவதாக கூறி ஏமாற்றியதற்காக கைது செய்யப்படவில்லை என்பதும், அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.