வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (16:01 IST)

இரண்டாம் உலகப்போர் காலத்து 450 கிலோ வெடிகுண்டு கண்டுபிடுப்பு

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த 450 கிலோ வெடிகுண்டு கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. 

மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் அருகே உள்ள,  மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
 
சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, ஒரு பெரிய பொருள் இருப்பதை உணர்ந்தனர். அங்கு 4 அடி நீளத்தில் இருந்த வெடிகுண்டு புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வெடிகுண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.
 
தொடர்ந்து அக்குண்டு ஆய்வு செய்யப்பட்டபோது, இது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்று தெரியவந்தது. இது 450 கிலோ எடையிருந்ததாகக் கூறப்படுகின்றது. இது 1933ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்த வெடிகுண்டை அருகாமையில் உள்ள துத்குன்டி காட்டில் செயலிழக்க வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.