வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (05:12 IST)

உலகிலேயே முதன்முதலாக சூரிய சக்தியில் செயல்படும் கொச்சி விமான நிலையம்

உலகிலேயே சூரிய சக்தியில் செயல்படும், முதல் விமான நிலையமான, கொச்சி விமான நிலையத்தில், சோலார் பவர் பிளான்டை கேரள முதலமைச்சர்  உம்மன் சாண்டி தொடங்கி வைத்தார்.
 

 
கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தினசரி சுமார் 50,000 முதல் 60,000 ஆயிரம் யூனிட்டுகள் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்தது.
 
இதனையடுத்து, முதல்கட்டமாக, கடந்த மார்ச் 2013 ஆம் ஆண்டு 100 கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் வருகை முனைய கட்டிடத்தின் கூரையில் அமைத்தது. கிரிட் முறையில் வடிவமைக்கப்பட்ட அதில், பேட்டரிக்கு பதிலாக ஸ்டிரிங் இன்வெர்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த முயற்சி வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், கொச்சி விமான நிலையம் முழுமைக்கும் சோலார் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கார்கோ காம்ப்ளக்ஸ் அருகே சுமார் 45 ஏக்கர்கள் நிலப்பரப்பில் 46,150 சோலார் பேனல்களுடன் கூடிய 12 மெகாவாட் சோலார் பவர் பிளான்டை கேரள முதல்வர் உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார். இதன்மூலம் விமான நிலையத்திற்குத் தேவையான அனைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.
 
 
உலகத்திலேயே, சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் விமான நிலையம் என்ற பெருமையை கொச்சி விமான நிலையம் பெற்றுள்ளது.