1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (17:52 IST)

உங்கள் டாலர்களை விட, அறிவுத் திறனே தேவை - உலக வங்கித் தலைவரிடம் நரேந்திர மோடி கருத்து

டாலர்களை விட உலக வங்கியின் அறிவுத் திறனிலும் வல்லுநர் தன்மையிலும் நாங்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளோம் என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மிடம் (Jim Yong Kim) பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2014 ஜூலை 23 அன்று நிகழ்ந்த உலக வங்கித் தலைவருடனான இந்தச் சந்திப்பு, மிகச் சிறப்பாக இருந்தது. வருங்காலத்தில் இணைந்து பணிபுரிவதற்கான பல்வேறு வழிகளை விவாதித்தோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் பிரதமர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது:
 
மக்களை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் பணிபுரிவது குறித்து விவாதிக்கப்பட்டது. நாம் வாழும் இந்த உலகில் வேகம் மிக முக்கியமானது. விரைவில் நடைமுறைப்படுத்துவதும் அவசியம் ஆகும். உலக வங்கியின் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தாக்கத்தை அதிகரிக்கும். 
 
டாலர்களை விட உலக வங்கியின் அறிவுத் திறனிலும் வல்லுநர் தன்மையிலும் நாங்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளோம். உலக வங்கி நமது தகவல் வங்கியாக இருக்க டாக்டர் கிம் ஒப்புதல் அளித்துள்ளார். பேரளவு உற்பத்திற்கான உத்திகளை மட்டுமல்லாமல் வெகுஜனத்தால் உற்பத்தி செய்வதற்கான உத்திகளையும் நாங்கள் உலக வங்கியிடமிருந்து அறிய ஆர்வத்துடன் உள்ளோம்.
இன்று உலகம் எப்படி பொருட்களைச் சந்தைப்படுத்துவது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால், எதிர்காலத்தில் தொழில் திறன் மிக்க மக்களைக் கண்டறிவது ஒரு முக்கிய பிரச்சனையாகும். நாம் இந்தத் திசையை நோக்கிச் செயல்பட வேண்டும்.
 
கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் திட்டம், உலக வங்கிக்கு ஒரு ஊக்குவிக்கும் திட்டமாக விளங்கும் என்று நான் டாக்டர் ஜிம் யாங் கிம்மிடம் தெரிவித்தேன்.
 
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.