வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (21:42 IST)

கர்நாடகாவில் கவிழ்ந்த கோவில் தேர். அபசகுணம் என மக்கள் அதிர்ச்சி

கர்நாடகா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குரு கொட்டுரேஸ்வர கோயில் தேர் திருவிழா இன்று வெகுசிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் கோவில் தேர் சற்றுமுன்னர் திடீரென கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.




கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குரு கொட்டுரேஸ்வரா கோயில் தேர்திருவிழா என்றாலே மாநிலம் முழுவதும் கோலாகலமாக இருக்கும். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இன்று இந்த தேர்த்திருவிழாவை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தேரின் அடியின் சிக்கி 6 பேர் படுகாயமும், 3 பேர் சிறிய காயமும் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தேர் கவிழ்ந்தது கெட்ட சகுணமாக அப்பகுதி மக்கள் பார்க்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் நேருமே என்று அந்த பகுதி மக்கள் அச்சம் கொள்வதாக கூறப்படுகிறது.